நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 07, 2018

மார்கழிக் கோலம் 23

தமிழமுதம்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து..(126) 
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 23

நீ மட்டுமே வேண்டும் கிருஷ்ணா!..


மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் 
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி 
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன் 
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த 
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்...
   *
தித்திக்கும் திருப்பாசுரம்


மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய்
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே - நண்ணித்
திருமாலை செங்கண் நெடியானை எங்கள்
பெருமானைக் கைதொழுத பின்..(2271)
-: பூதத்தாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***
நல்லதோர் வீணை


சிவ தரிசனம்

திருத்தலம்
திரு ஏகம்பம் - காஞ்சிபுரம்


இறைவன்
ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்,  திரு ஏகம்பநாதன்  


அம்பிகை
ஸ்ரீ காமாக்ஷி, ஏலவார்குழலி 

தல விருட்சம் - மா
தீர்த்தம் - கம்பை



கம்பையாற்றங்கரையில்
அன்னை பராசக்தி
ஸ்ரீ காமாட்சியாய் எழுந்தருளி 
மணலால் லிங்கம் இயற்றி
சிவ வழிபாடு நிகழ்த்திய திருத்தலம்..



அம்பிகையின் திருமணத் திருத்தலம்..

பஞ்ச பூதத் தலங்களுள்
மண்ணின் பகுப்பு..
*


ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை
இறையானை ஏர்கொள் கச்சித் திருஏகம்பத்
துறைவானை அல்லது உள்காதென துள்ளமே..(2/12) 

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை
பெண்ணோடு ஆணென்று பேசற்கு அரியவன்
வண்ணம் இல்லி வடிவு வேறாயவன்
கண்ணில் உண்மணி கச்சி ஏகம்பனே..(5/47)

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருப்பாட்டு

குண்ட லந்திகழ் காதுடை யானைக்
கூற்று தைத்த கொடுந் தொழிலானை
வண்டலம்பு மலர்க் கொன்றையி னானை
வாளரா மதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே..(7/61)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருஅம்மானை 
09 - 10


துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும்
அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய்...

விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்... 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

8 கருத்துகள்:

  1. முதல் அப்டம் அழகு!! க்ருஷ்ணா நீ மட்டுமே வேண்டும் ஆஹா நேற்றைய தொடர்ச்சி இப்பாடல். நேற்று அப்ளிகேஷன் போட்டுட்டு கொஞ்சம் ஆராய்ந்து நாங்க வந்த காரியத்த முடிச்சுக் கொடுப்பா...

    எத்தனை பொருள் கொள்ளலாம் இதற்கு...அருமை!!!

    ஏகாம்பரேஸ்வரரையும் அம்மையும் கண்டு நல்ல தரிசனம் கிடைக்கப் பெற்றோம்

    இந்த நாள் இனிதாய் அமையட்டும்...நானும் இத்தரிசனம் கண்டு வேலையைப் பார்க்கப் போகிறேன் ...

    கீதா!

    பதிலளிநீக்கு
  2. அழகிய படங்களின் தரிசனம் ஆனது. __/\__

    அப்பாடி.. காஞ்சிக் கோவில் நான் சென்றிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. அதிகாலை தரிசனம் நன்று வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  4. திருப்பாவையும், நால்வர் பாடல்களும் மனதிற்கு இதமளித்தன. காஞ்சீபுரம் சென்றுள்ளேன். கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக என் மனதில் நிற்பது காஞ்சியே.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான தரிசனம்...

    பதிலளிநீக்கு
  6. அழகிய படங்கள். காஞ்சி ஒரே ஒரு முறை சென்றதுண்டு - அலுவல் சம்பந்தமாக. மீண்டும் செல்ல வேண்டும் - ஆற அமர.

    பதிலளிநீக்கு
  7. என் வருகையையும் பதிவு செய்கிறேன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..