நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 23, 2016

மார்கழிப் பூக்கள் 08

தமிழமுதம்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்..(484) 
***

ஔவையார் அருளிய
மூதுரை

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.. 
* * *

அருளமுதம்

ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை

திருப்பாடல் - 08


கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!..
***

ஸ்ரீ திருமழிசையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்

ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் - திருக்கோளூர்
அத்தனாகி அன்னையாகி ஆளும்எம் பிரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப் பொழித்துநம்மை யாட்கொள்வான்
முத்தனார்மு குந்தனார்பு குந்துநம்முள் மேவினார்
எத்தினாலி டர்க்கடல்கி டத்தியேழை நெஞ்சமே..(866)

ஓம் ஹரி ஓம் 
* * *

சிவ தரிசனம்
பஞ்ச பூதத்திருத்தலங்கள்

மூன்றாவது திருத்தலம்

திருஅண்ணாமலை
அக்னி ஸ்வரூபம் என்ற அருணாசலம்


இறைவன் - அருள்திரு அண்ணாமலையார்
அம்பிகை - அருள்தரு உண்ணாமுலையாள்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்
தலவிருட்சம் - மகிழ மரம்

எண்ணிறந்த பெருமைகளையுடைய திருத்தலம்..
மாமலையே சிவ வடிவமாகப் போற்றப்படுவது..

ஈசன் எம்பெருமான் - ஸ்ரீ ஹரி பரந்தாமனுக்கும் நான்முகனுக்கும்
நடுவில் அடிமுடி அறியவொண்ணா அக்னிப் பிழம்பாகத் தோன்றி
அவர்தம் அகந்தையை அகற்றி மாமலையாய்க் குளிர்ந்து நின்றனன்..

நினைக்க முக்தியளிக்கும் திருத்தலம் எனப் புகழப்படுவது..


அன்று தொட்டு இன்றளவும்
யோகியரும் ஞானியரும் தம்முள் எண்ணித் துதித்திருப்பது..
எண்ணற்ற ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பது..

மாணிக்கவாசகப்பெருமான் இத்திருத்தலத்தில் தான்
திருப்பள்ளியெழுச்சியும் திருவெம்பாவையும் அருளினார்..

முருகப்பெருமான் அருணகிரியை ஆட்கொண்டருளியதும்
அவர் பொருட்டு கம்பத்தடியில் காட்சியளித்ததும் இங்கேதான்.. 

- பாடிப்பரவியோர் - 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
மாணிக்கவாசகர் மற்றும் பல புண்ணியர்
***

கார்த்திகை தீப தரிசனம்

காணொளி வழங்கிய 
திரு பாஸ்கர் ஜயராமன் அவர்களுக்கு நன்றி..



ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

பூவார்மலர்கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம்பிணை வந்துஅணையும் சாரல் அண்ணா மலையாரே!.. (1/69)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு எண்தோள் சுடர்மழுப் படையினானே
ஆதியே அமரர் கோவே அணிஅணா மலையுளானே
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவிலேனே!..(4/63)
* * *

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த 
திருப்பள்ளியெழுச்சி

திருப்பாடல் - 08


முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலாய் யாவர் மற்றறிவார்
பந்தணை விடலியும் நீயும் நின்னடியார் 
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதுங் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!.. 
* * *

தேவி தரிசனம்

ஸ்ரீ பகவதி பத்ரகாளி
கீழக்காவு - சோட்டாணிக்கரை


சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.. (28)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

9 கருத்துகள்:

  1. மார்கழி சிறப்புப் பதிவு - வெகு சிறப்பு. பாராட்டுகளும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு நாளும் மார்கழிப் பூ மலர்ந்து
    மணம் வீசிக் கொண்டே இருக்கிறது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. மார்கழி மலர்கள் மிக அருமை.
    படங்களும், காணொளியும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஐயா...அருமையான பகிர்வுக்கு..

    பதிலளிநீக்கு
  5. பாவை பா கோலாகலமாக இருக்கு,, தொடர்கிறேன்,,

    பதிலளிநீக்கு
  6. தமிழ் மணக்கும் மார்கழிப்பூக்கள்

    பதிலளிநீக்கு
  7. அருமை... அருமையான பகிர்வு ஐயா....

    ஐயா,

    என்னோட சிறுகதை ஒன்று பிரதிலிபி போட்டியில் இருக்கு படித்து கருத்துச் சொல்லுங்க... நல்லாயிருந்தா மற்றவர்களையும் படிக்கச் சொல்லுங்க...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..