நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 17, 2013

தை வெள்ளி - 01

thanjavur14
அமீசர் ஒரு பாகம் அகலாத அபிராமவல்லி
தைத்திங்கள்  - '' பொங்கல் " எனும் திருநாளுடன் ஒரு புத்தாண்டைப் போல, தெய்வ வழிபாட்டுடனும் இயற்கை வழிபாட்டுடனும் தொடங்குகின்றது. 

உண்டு மகிழவும் உடுத்தி மகிழவும் உற்றார் உறவினரைக் கண்டு மகிழவும் என பலவகையிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். ஆக நிறைந்த சிறப்புகளையும் பெருமைகளையும் உடையது தை மாதம் என்றால்  அது மிகையில்லை.

மனிதர்களுக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களுக்குரிய  அந்த ஒரு நாளில் - பகல் ஆறு மாதங்கள். இரவு ஆறு மாதங்கள். சிறப்புடைய தை மாதம் பகல் பொழுதுடன் தொடங்குகின்றது. 

சூரியன்  தை முதல் ஆனி வரை வட திசையாகப் பயணம் செய்வது உத்தராயணம். இது  நல்ல காரியங்களைச்   செய்வதற்கான சிறந்த காலமாகும். சூரியன் ஆடி முதல் மார்கழி வரை தென் திசையாகப் பயணம் செய்வது தட்சிணாயணம்.  இந்த இரண்டு அயணங்களும் இணைந்ததே  ஓராண்டு ஆகும்.  எனவே  அயணங்களின் தொடக்க மாதங்களாக - தை மாதமும் ஆடி மாதமும்  தனிச்சிறப்பு பெற்ற மாதங்களாக விளங்குகின்றன.

ஆடி வெள்ளியும் தை வெள்ளியும்  - மஹாலக்ஷ்மியை, பராசக்தியை வழிபடுவதற்கு ஏற்ற நாட்களாகத் திகழ்கின்றன.

பித்ருக்களுக்கான நீர்க்கடன்களை நிறைவேற்ற  ஆடி அமாவாசையும்,  தை அமாவாசையும்  உகந்தவை.

ஆடிக்கிருத்திகையும், தை மாதக் கிருத்திகையும்  - முருகப்பெருமானை வேண்டி விரதமிருந்து வழிபடுவதற்கான நட்சத்திரங்கள்.

உழவர் பெருமக்களுக்கு ஆடி மாதம் விதைக்கும் காலம் . தை மாதம் அறுவடைக் காலம் - என்ற வகையிலும் இரண்டு மாதங்களும் இணைகின்றன.

ஆக இந் அளில்,
ை மத்ின் மல் வெள்ளிக்கிழையில் ம்பிகையாரப் போற்றி வங்கற்கு என  ினாறு பேறுகையும் ந்ுளேண்டி அபிராமட்டர் அருளிய - "அபிராமல்லியின் ிருப்பிகத்ில்" இருந் அற்புதமான பாடல் ஒன்று. 

"அன்னை வருவாள்... அருள் அமுதைத் தருவாள்!..."

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்!

அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே!

ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!

அருள்வாமி! அபிராமியே!....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..